அன்பைத் தேடி…

புதிய நிலம் தேடி அவளுடைய குடும்பத்தினர் போனார்கள். புதிய ஊரில் தாங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவோம் என்கிற எதிர்பார்ப்புடன் பயணித்தார்கள்… அந்தப் பயணம் இனிதே முடிந்ததா?

உயரப் பறந்த சாலிம் அலி

சாலிம் அலி போன்ற ஒருவர் கடந்த நூற்றாண்டில் இந்தியாவுக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால், இந்தியப் பறவைகள், காடுகள் குறித்த புரிதல் பெருமளவு பின்னடைவைச் சந்தித்திருக்கும்.

வடிவத் துப்பறிவாளன் பிரணவ்

மரத்தில் ஓர் ஆச்சரியத்தைப் பார்க்கும்வரை, பிரணவின் நாள் சாதாரணமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அங்கே அவன் கண்டறிந்தது, உலகைப் புதிய பார்வையுடன் பார்க்கும் ஒரு பயணத்துக்கு இட்டுச் சென்றது. வடிவங்களைத் துப்பறியத் தொடங்கிய பிரணவ், என்ன கண்டுபிடித்தான்?

ஓய்ந்திருக்கலாகாது

இந்தக் கதைகளை எழுதிய எழுத்தாளர்கள் தமிழகத்தின் வெவ்வேறு நிலப்பரப்பைச் சேர்ந்தவர்கள்.சீர்கேடு மிகுந்த கல்வித் திட்டங்கள் மாற்றியமைக்கப்படுதலும் முறையான பயிற்றுவித்தல் பறிற்சியும்,சமூக அக்கறையோடுகூடிய கல்வியுமே ஒரு மனிதனை உருவாக்க முடியும்.அதற்கான முன்முயற்சிகளில் ஒன்றுதான் இந்தத் தொகுப்பு.

பாம்பு இல்லாத பாம்புப்பட்டி

முதலை, ஆமை, பாம்பு, ஓணான் போன்ற பெரிய ஊர்வன வகைகள் எல்லாம் ஒரு காட்டை பகிர்ந்துகொண்டு இணக்கமாக வாழ்ந்துவந்தன. ஆனால், அந்தக் காட்டில் ஆமைகள் இருக்கக் கூடாது என்று திடீரென்று ஒருநாள் உத்தரவிட்டது முதலைத் தலைவன். பிறகு பாம்புகள், கடைசியில் ஓணான்கள் என மற்ற இனங்களையும் முதலைத் தலைவன் விரட்டிவிட்டது. அதற்குப் பிறகு அந்தக் காடு காடாக இருந்ததா? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.

எத்தனைக் காலம்தான் ஏமாற்ற முடியும் ?

ஸ்னீச்சஸ் என்று ஒரு விநோதப் பாலூட்டி இனம். அதில் ஒரு பகுதி ஸ்னீச்சஸூக்கு வயிற்றில் நட்சத்திரமும், மற்றொரு பகுதி ஸ்னீச்சஸூக்கு வயிற்றில் நட்சத்திரம் இல்லாமலும் இருந்தது. நட்சத்திர ஸ்சீச்சஸ், நட்சத்திரமில்லாத ஸ்னீச்சஸை ஒதுக்கி வைத்தே வாழ்ந்து வந்தது. இந்த நேரத்தில் வயிற்றில் நட்சத்திரம் பொறிக்கும் இயந்திரத்துடன் அங்கே வருகிறார் வாரன் டிமோ. அதற்குப் பிறகாவது இரண்டு வகை ஸ்னீச்சஸூம் கூடி வாழ முடிந்ததா, வாங்க தெரிந்து கொள்வோம்.

சர்வாதிகாரி – சார்லி சாப்ளின்

மௌனப் படங்களின் தன்னிகரில்லாத நாயகன் என அறியப்படும் சார்லி சாப்ளின் அவர்கள் பேசி நடித்த ஒரே படம், “The Great Dictator”. யூடியூப்பில் இன்றும் அதை கண்டு மகிழலாம். அந்தப் படத்தின் கதை வசனத்தை, கதையை சுருக்கமாக வடித்து தமிழில் புத்தகமாக்கி இருக்கிறது, பாரதி புத்தகாலயம். ஆதி வள்ளியப்பன் தன் வழமையாக எளிய தமிழில் எவருக்கும் புரியும் வண்ணம் எழுத்தாக்கி இருக்கிறார்.

வீரம் விளைந்தது

1917-இல் நவம்பர் புரட்சி நடைபெற்றது. அதற்குப் பிறகு தொழிலாளர்கள், செஞ்சேனையின் வசம் அந்த நாடு சென்றது. ஆனால், புரட்சிக்கு எதிராக உள்நாட்டுப் போர் நடைபெற்றது. அதில் எதிர்ப் புரட்சிப் படைகள், ஏகாதிபத்திய நாடுகளின் படைகள், நிலப்பிரபுக்களின் படைகளை எதிர்த்து 1922 வரை செஞ்சேனை போரிட்டது. இந்தப் போரில் 16 வயதில் பங்கெடுக்க ஆரம்பித்த பாவெல் கர்ச்சாகின் என்ற இளைஞனின் வீரதீரப் போராட்டமே இந்நாவல்.

1 2 4