அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு

ஹிரோஷிமாவின் மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டால் சடாகோ சசாகி என்ற சிறுமி இரத்தப் புற்றுநோய்க்கு ஆளானாள். ஜப்பானியர்களின் நம்பிக்கையின்படி நீண்ட நாள் வாழ்வதற்காக ஆயிரம் காகிதக் கொக்குகளைச் செய்ய சடாகோ சசாகி முயல்கிறாள். அவளால் ஆயிரம் காகிதக் கொக்குகளை செய்ய முடிந்ததா? சடாகோ என்ன ஆனாள் என்பதே இந்த நிஜக்கதை.

எல்லாம் தந்த மரம்

உலகப் புகழ்பெற்ற சூழலியல் கதை சொல்லம் நூலதான் எல்லாம் தந்த மரம் ஆகும். இதழாளர் ஆதி வள்ளியப்பன் எழுதிய நூல். சூழலியல் குறித்து எளிமையாக அனைவருக்கும் புரியும்படி எழுதுவது இவரின் சிறப்பு.

எறும்புகள் ஈக்கள்

எறும்புகள்-ஈக்கள் பற்றி மிக எளிமையாக ஆச்சரியமான தகவல்கள் உடைய புத்தகம். எறும்பில்-ஈக்களில் இவ்வளவு ஆச்சரியங்கள் உள்ளனவா ? அறிவியல் பூர்வமாக எழுதப்பட்டுள்ள புத்தகம். உங்கள் வீட்டு சிறுவர்கள் நிச்சயம் தெரிந்து கொள்ளவேண்டும்

ஐம்பூதம் – இயற்கையின் ஐந்து கொடைகள்

ஐம்பூதம் என்றழைக்கப்படும் இந்த இயற்கையின் கொடைகள், நமக்கு இவ்வளவு காலம் தந்துவருபவை என்ன? இந்த இயற்கை வளங்களை முக்கியத்துவத்தை உண்மையிலேயே நாம் உணர்ந்துகொண்டிருக்கிறோமா?

ஒரு கேமராவும் சில தவளைகளும்

‘மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள் அழிவதால் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பு’ குறித்து நடைபெற்ற ஆய்வுக் குழுவில் இந்த நூலாசிரியரும் இடம்பெற்றிருந்தார். மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியப் பகுதிகளில் கண்டறியப்பட்ட புதிய தவளை வகைகள், தவளைகளின் வாழ்நிலை, காடு துண்டாதல், உயிரினங்கள் எதிர்கொண்டிருக்கும் அச்சுறுத்தல் உள்ளிட்ட அம்சங்களை, அவருடைய அனுபவங்கள் வழியாக விவரித்து ஒரு கானுலாவுக்கு இட்டுச் செல்கிறது இந்த நூல்.

ஓர் மழைக்காட்டின் பேரழிவு

அமேசான் காட்டின் உண்மை நிலையை இந்த சிறு புத்தகம் உணர்த்துகிறது. நவீன வர்த்தக நடைமுறைகளின் ஒரு பகுதியாகவே அமேசான் காடு அழிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.

கடைசிப் பூ

பன்னிரண்டாவது போர் பத்தி உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். அதில் மனித குல நாகரிகமும் பண்பாடும் ஒட்டுமொத்தமாக அழிந்து போயின. கிராமங்கள், நகரங்கள் எல்லாம் காணாமல் போயின. பயிர்நிலங்கள், காடுகள் துடைத்து அழிக்கப்பட்டன. பூங்காக்கள், தோட்டங்கள் எரிக்கப்பட்டன. அனைத்துக் கலைப்பொருட்களும் நொறுக்கப்பட்டன. எல்லாரும் படிக்க வேண்டிய கதை

காட்டின் கதைகள்

மும்பையில் பல ஆண்டுகளுக்கு முன் நான் வாழ்ந்தபோது, ஒரு சிட்டுக்குருவி ஜோடி வைக்கோல், சணலைக் கொண்டு எனது கூரை மின்விசிறியின் மேல் குழிப் பகுதியில் கூடு கட்டியிருந்தது. அடக் கடவுளே! இந்த சிட்டுக்குருவிகள் பாதுகாப்பான பெற்றோர்களாக எப்படி இருக்க முடியும் என்று எனக்குத் தோன்றியது.

1 2 3