அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு

ஹிரோஷிமாவின் மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டால் சடாகோ சசாகி என்ற சிறுமி இரத்தப் புற்றுநோய்க்கு ஆளானாள். ஜப்பானியர்களின் நம்பிக்கையின்படி நீண்ட நாள் வாழ்வதற்காக ஆயிரம் காகிதக் கொக்குகளைச் செய்ய சடாகோ சசாகி முயல்கிறாள். அவளால் ஆயிரம் காகிதக் கொக்குகளை செய்ய முடிந்ததா? சடாகோ என்ன ஆனாள் என்பதே இந்த நிஜக்கதை.

இயற்கையைத் தேடும் கண்கள்

அணில், உணவு தேடிவரும் கீரிப்பிள்ளை, ஆர்வக் குறுகுறுப்பு மிகுந்த நீர்நாய், மாட்டினங்களிலேயே மிகப் பெரிதான காட்டு மாடு போன்ற தமிழக உயிரினங்களைப் பற்றிக் கூடுதலாக அறிந்துகொள்ளலாம். இயற்கையைத் துப்பறிவதற்கான சிறந்த வழிகாட்டியாக இந்தப் புத்தகம் திகழும்.

காட்டின் குரல் கேட்கிறதா

இயற்கை நாட்காட்டிகளைப் போல் தாவரங்கள் எப்படிக் காலத்தைச் சொல்கின்றன?, காட்டுயிர்களை ஏன்-எதற்காகப் பாதுகாக்க வேண்டும்? – என்பது போன்று நமக்கு அடிக்கடி எழும் பல கேள்விகளுக்கு தெளிவான பதிலை இந்த நூல் தருகிறது.

குழந்தைகளுக்கு லெனின் கதை

உலகின் நலம் நாடுகிற, ஏற்றத் தாழ்வற்ற ஓர் சமூகத்தைக் கனவு காண்கிற அனைவரின் இதயத்திலும் என்றென்றும் நிலைபெற்றிருக்கும் மாபெரும் தலைவர் லெனின். பொதுவுடைமைக் கொள்கை கொடுத்த இணையற்ற புரட்சிக்காரர். எளிய மக்களிடம் தீராத அன்பு கொண்டவர். வறுமையில் வாடும் மனிதர்களின் வாழ்க்கை மேம்பட தன் வாழ்வை அர்ப்பணித்தவர். லெனின் வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் இந்தப் புத்தகத்தை குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள். ஏனென்றால், லெனின் அவர்களைப் போன்றவர், அவர்களில் ஒருவர்.

நம்மைச் சுற்றி காட்டுயிர்

நம்முடன், நம் வீட்டில் ஒருவராக வாழும் செல்லப்பிராணிகள் மனித உலகிற்கும், விலங்கு உலகிற்கும் ஒரு பாலம் போல் அமைகின்றன. இவற்றைப் பற்றியும் இந்நூலில் படிக்கலாம்,

நீ கரடி என்று யார் சொன்னது?

ஒரு நாள் ஒரு கரடி விழித்து எழுந்தபோது, தான் ஒரு தொழிற்சாலை வளாகத்துக்குள்இருப்பதை உணர்கிறது. அங்கிருக்கும் அதிகாரிகளோ அதுவும் ஒரு தொழிற்சாலை ஊழியர்தான் என்று சொல்லி, அந்தக் கரடியும் அங்கே வேலைபார்க்க வேண்டுமென்று நெருக்கடி தருகிறார்கள். ‘தான் ஒரு காட்டுக் கரடி’ என்று அது மீண்டும் மீண்டும் சொன்னபிறகும், அதை அவர்கள்ஏற்றுக்கொள்ளவில்லை. வேறு வழியில்லாமல் அந்தக் கரடி தொழிற்சாலையில் வேலை பார்க்க ஆரம்பிக்கிறது. தொடர்ந்து அது வேலை பார்த்ததா, அதற்குப் பிறகு அந்தக் கரடிக்கு நடந்தது என்ன?

யாரங்கே பாடுவது?

காட்டில் எல்லோரும் உறங்கும் நேரத்தில் விழித்திருக்கும் ஆந்தை, இரவில் உணவு தேடி அலைகிறது. காலையில் களைப்புடன் அது தூங்க ஆரம்பிக்கும் நேரத்தில், ஒரு வானம்பாடி குரலெடுத்துப் பாடத் தொடங்குகிறது. ஆந்தை கேட்டுக்கொண்டதால் வானம்பாடி பாடுவதை நிறுத்துகிறது. ஆனால், அதற்குப் பிறகும் பாட்டுச் சத்தம் கேட்கிறது. ஆந்தையைத் தூங்கவிடாமல் பாடியது யார்?

வங்காரியின் பசுமைத் தூதுவர்கள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மூலமாகவும், எளிய மக்களுக்கு வளமான வாழ்க்கையை ஏற்படுத்தித் தருவதன் மூலமாகவும் மக்களிடையே அமைதி நிலவச் செய்ய முடியும்.

1 2