கும்பிடுபூச்சியின் பயங்கரப் பசி

பயங்கரப் பசி கொண்ட ஒரு பூச்சி, அந்த ஊருக்குப் புதிதாக வருகிறது. அது என்னவெல்லாம் சாப்பிடுகிறது? எப்படி அவற்றைப் பிடிக்கிறது? கடைசியில், தன்னைவிட பெரிய பூச்சி ஒன்றைப் பிடித்த பிறகு, அது என்ன செய்கிறது?

பறவை டாக்டர்

காட்டில் வாழும் எருமை, காண்டாமிருகம், முதலைக்கு உடம்பு சரியில்லை. நமக்கு உடம்பு சரியில்லை என்றால் டாக்டரிடம் போகிறோம், மருந்து சாப்பிடுகிறோம். காட்டில் வாழும் உயிரினங்கள் யாரிடம் போகும்?

தாத்தா பூ எங்கே போகிறது

ஒரு தாத்தா பூ தன் தாய்ச்செடியிடம் இருந்து புறப்பட்டு காற்றில் பறந்து பறந்து காடெல்லாம் சுற்றுகிறது. அப்படிப் பறந்தபோது எங்கேயெல்லாம் போனது? யாரையெல்லாம் பார்த்தது? அப்புறம் அந்த தாத்தா பூவே ஆச்சரியப்படும் வகையில், அதைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தது யார் தெரியுமா?

தமிழர் தாவரங்களும் பண்பாடும்

தமிழர்களின் ஐந்திணை எனும் சூழல் வாழ்வு இன்று மறக்கப்பட்டுவிட்டது. நமது பண்பாட்டிற்கே உண்டான தாவரங்கள் பலவும் அழிவின் விளிம்பில் உள்ளன. தமிழ்நாட்டின் தாவரங்கள், அவற்றின் சிறப்புகளை தொகுத்துள்ள இந்த 52 பக்கப் புத்தகம் ஒரு அரிய பொக்கிஷம்.

வாவுப் பறவை

வெளவால்கள் குறித்து உலகெங்கிலும் நிலவிவரும் கற்பிதங்களும் மூடநம்பிக்கைகளும் ஏராளம். இந்தக் கூற்றுகளுக்கு அறிவியல் ஆதாரமில்லை என்பதை இந்த நூல் எடுத்துரைக்கிறது. வெளியீடு – பாரதி புத்தகாலயம், தொலைபேசி: 044 24332424, 24332924

நம்மைச் சுற்றி காட்டுயிர்

நம்முடன், நம் வீட்டில் ஒருவராக வாழும் செல்லப்பிராணிகள் மனித உலகிற்கும், விலங்கு உலகிற்கும் ஒரு பாலம் போல் அமைகின்றன. இவற்றைப் பற்றியும் இந்நூலில் படிக்கலாம்,

வங்காரியின் பசுமைத் தூதுவர்கள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மூலமாகவும், எளிய மக்களுக்கு வளமான வாழ்க்கையை ஏற்படுத்தித் தருவதன் மூலமாகவும் மக்களிடையே அமைதி நிலவச் செய்ய முடியும்.

அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு

ஹிரோஷிமாவின் மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டால் சடாகோ சசாகி என்ற சிறுமி இரத்தப் புற்றுநோய்க்கு ஆளானாள். ஜப்பானியர்களின் நம்பிக்கையின்படி நீண்ட நாள் வாழ்வதற்காக ஆயிரம் காகிதக் கொக்குகளைச் செய்ய சடாகோ சசாகி முயல்கிறாள். அவளால் ஆயிரம் காகிதக் கொக்குகளை செய்ய முடிந்ததா? சடாகோ என்ன ஆனாள் என்பதே இந்த நிஜக்கதை.

1 2 6