ஓய்ந்திருக்கலாகாது

இந்தக் கதைகளை எழுதிய எழுத்தாளர்கள் தமிழகத்தின் வெவ்வேறு நிலப்பரப்பைச் சேர்ந்தவர்கள்.சீர்கேடு மிகுந்த கல்வித் திட்டங்கள் மாற்றியமைக்கப்படுதலும் முறையான பயிற்றுவித்தல் பறிற்சியும்,சமூக அக்கறையோடுகூடிய கல்வியுமே ஒரு மனிதனை உருவாக்க முடியும்.அதற்கான முன்முயற்சிகளில் ஒன்றுதான் இந்தத் தொகுப்பு.

கடைசிப் பூ

பன்னிரண்டாவது போர் பத்தி உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். அதில் மனித குல நாகரிகமும் பண்பாடும் ஒட்டுமொத்தமாக அழிந்து போயின. கிராமங்கள், நகரங்கள் எல்லாம் காணாமல் போயின. பயிர்நிலங்கள், காடுகள் துடைத்து அழிக்கப்பட்டன. பூங்காக்கள், தோட்டங்கள் எரிக்கப்பட்டன. அனைத்துக் கலைப்பொருட்களும் நொறுக்கப்பட்டன. எல்லாரும் படிக்க வேண்டிய கதை

காட்டின் கதைகள்

மும்பையில் பல ஆண்டுகளுக்கு முன் நான் வாழ்ந்தபோது, ஒரு சிட்டுக்குருவி ஜோடி வைக்கோல், சணலைக் கொண்டு எனது கூரை மின்விசிறியின் மேல் குழிப் பகுதியில் கூடு கட்டியிருந்தது. அடக் கடவுளே! இந்த சிட்டுக்குருவிகள் பாதுகாப்பான பெற்றோர்களாக எப்படி இருக்க முடியும் என்று எனக்குத் தோன்றியது.

கானமயிலைத் தொலைத்தோம்

தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடு மேற்கு மலைத் தொடர் காடுகளின் 5 சதவீதப் பகுதியில் வாழ்ந்துவரும் ஓரிடவாழ்வி (endemic). 1970-1980களில் 2000 – 2,500 வரை இருந்த இவற்றின் எண்ணிக்கை 2008 வாக்கில் 1,800 – 2,000 ஆகக் குறைந்துவிட்டது. மலை முகடுகள், புல்வெளிகள், திறந்தவெளிகளில் வாழும் இந்த ஆடு அதிகாலையிலும், பிற்பகல் நேரத்திலும் இரை தேடும். சராசரியாக மூன்றரை ஆண்டுகளே வாழும். வாழிட அழிவும், கள்ள வேட்டையும்தான் இவற்றின் அழிவுக்கு முக்கியக் காரணம்

கிரெட்டா துன்பர்க் பூவுலகைக் காக்கப் புறப்பட்ட சிறுமி

நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் பேரச்சம் கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறேன். நான் நாள்தோறும் உணரும் அச்சத்தை, நீங்களும் உணர வேண்டுமென எதிர்பார்க்கிறேன். நம் வீடு தீப்பற்றி எரியும்போது என்ன செய்வோம்? அதையே இப்போதும் செய்ய வேண்டும். ஏனென்றால், நம் தாய்மண்ணான பூவுலகு பற்றி எரிந்துகொண்டிருக்கிறது

கும்பிடுபூச்சியின் பயங்கரப் பசி

பயங்கரப் பசி கொண்ட ஒரு பூச்சி, அந்த ஊருக்குப் புதிதாக வருகிறது. அது என்னவெல்லாம் சாப்பிடுகிறது? எப்படி அவற்றைப் பிடிக்கிறது? கடைசியில், தன்னைவிட பெரிய பூச்சி ஒன்றைப் பிடித்த பிறகு, அது என்ன செய்கிறது?

குழந்தைகளுக்கு லெனின் கதை

உலகின் நலம் நாடுகிற, ஏற்றத் தாழ்வற்ற ஓர் சமூகத்தைக் கனவு காண்கிற அனைவரின் இதயத்திலும் என்றென்றும் நிலைபெற்றிருக்கும் மாபெரும் தலைவர் லெனின். பொதுவுடைமைக் கொள்கை கொடுத்த இணையற்ற புரட்சிக்காரர். எளிய மக்களிடம் தீராத அன்பு கொண்டவர். வறுமையில் வாடும் மனிதர்களின் வாழ்க்கை மேம்பட தன் வாழ்வை அர்ப்பணித்தவர். லெனின் வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் இந்தப் புத்தகத்தை குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள். ஏனென்றால், லெனின் அவர்களைப் போன்றவர், அவர்களில் ஒருவர்.

சர்வாதிகாரி – சார்லி சாப்ளின்

மௌனப் படங்களின் தன்னிகரில்லாத நாயகன் என அறியப்படும் சார்லி சாப்ளின் அவர்கள் பேசி நடித்த ஒரே படம், “The Great Dictator”. யூடியூப்பில் இன்றும் அதை கண்டு மகிழலாம். அந்தப் படத்தின் கதை வசனத்தை, கதையை சுருக்கமாக வடித்து தமிழில் புத்தகமாக்கி இருக்கிறது, பாரதி புத்தகாலயம். ஆதி வள்ளியப்பன் தன் வழமையாக எளிய தமிழில் எவருக்கும் புரியும் வண்ணம் எழுத்தாக்கி இருக்கிறார்.