மௌன வசந்தம்

கடந்த நூற்றாண்டில் மிகப் பெரிய தாக்கம் செலுத்திய 100 முக்கியப் புத்தகங்களில், ஒரு சுற்றுச்சூழல் புத்தகத்துக்கும் இடம் உண்டு: அது ரேச்சல் கார்சன் எழுதிய ‘மௌன வசந்தம்’ (Silent Spring). இந்தப் புத்தகம் வெளியானபோது, ‘அர்த்தமற்ற புத்தகம்’என்று முதலில் விமர்சித்திருந்தது ‘டைம்’ பத்திரிகை. ஆனால், அந்த ‘டைம்’ பத்திரிகையே பின்னாளில், ‘20-ம் நூற்றாண்டில் தாக்கம் செலுத்திய 100 முக்கிய ஆளுமைகள்’ என்று வெளியிட்டபட்டியலில் ரேச்சல் கார்சனுக்கு இடம் அளிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது வரலாறு.

வங்காரி மாத்தாய்

சூழலியல் துறையிலும் பெண்ணியச் சூழலியல் அதிகம் கவனம் பெறாத துறையாகவே இருக்கிறது. இந்தப் பின்னணியில், சுற்றுச்சூழல் சேவைக்காக நோபல் அமைதிப் பரிசு பெற்ற கென்ய சூழலியலாளர் வங்காரி மாத்தாய் பற்றிய ‘மாற்றத்துக்கான பெண்கள்: வங்காரி மாத்தாய்’

வங்காரியின் பசுமைத் தூதுவர்கள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மூலமாகவும், எளிய மக்களுக்கு வளமான வாழ்க்கையை ஏற்படுத்தித் தருவதன் மூலமாகவும் மக்களிடையே அமைதி நிலவச் செய்ய முடியும்.

வடிவத் துப்பறிவாளன் பிரணவ்

மரத்தில் ஓர் ஆச்சரியத்தைப் பார்க்கும்வரை, பிரணவின் நாள் சாதாரணமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அங்கே அவன் கண்டறிந்தது, உலகைப் புதிய பார்வையுடன் பார்க்கும் ஒரு பயணத்துக்கு இட்டுச் சென்றது. வடிவங்களைத் துப்பறியத் தொடங்கிய பிரணவ், என்ன கண்டுபிடித்தான்?

வீரம் விளைந்தது

1917-இல் நவம்பர் புரட்சி நடைபெற்றது. அதற்குப் பிறகு தொழிலாளர்கள், செஞ்சேனையின் வசம் அந்த நாடு சென்றது. ஆனால், புரட்சிக்கு எதிராக உள்நாட்டுப் போர் நடைபெற்றது. அதில் எதிர்ப் புரட்சிப் படைகள், ஏகாதிபத்திய நாடுகளின் படைகள், நிலப்பிரபுக்களின் படைகளை எதிர்த்து 1922 வரை செஞ்சேனை போரிட்டது. இந்தப் போரில் 16 வயதில் பங்கெடுக்க ஆரம்பித்த பாவெல் கர்ச்சாகின் என்ற இளைஞனின் வீரதீரப் போராட்டமே இந்நாவல்.

1 3 4