Author

இதழாளர், எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர், சுற்றுச்சூழல் / சிறார் செயற்பாட்டாளர். சொந்த ஊர் திருச்சி. 15 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை வாசம். இந்து தமிழ் நாளிதழின் இணைப்பிதழ் பிரிவு ஆசிரியர். தினமணி, தினகரன், இந்தியா டுடே, ஃபெமினா ஆகிய செய்தித்தாள்கள் – இதழ்களில் செய்தியாளர், உதவி ஆசிரியர், இதழ் ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். சுற்றுச்சூழல், அறிவியல், வரலாறு, குழந்தைகள் சார்ந்த எழுத்து, பேச்சு, செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டவர். 20 ஆண்டுகளாக சுற்றுச்சூழல், குழந்தைகள் சார்ந்து வெகுஜன இதழ்கள், துறை சார்ந்த இதழ்களில் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். நேரடியாகவும் மொழிபெயர்ப்பாகவும் 40-க்கும் மேற்பட்ட நூல்களைத் தந்துள்ளார். வாசிப்பு, இயற்கை-பறவை நோக்குதல், திரைப்படங்கள் பார்ப்பது போன்றவை அவர் மனத்துக்கு உற்சாகம் தருபவை.

ஆதி வள்ளியப்பன்

இதழாளர், எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர், சுற்றுச்சூழல் / சிறார் செயற்பாட்டாளர். சொந்த ஊர் திருச்சி. 15 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை வாசம். இந்து தமிழ் நாளிதழின் இணைப்பிதழ் பிரிவு ஆசிரியர். தினமணி, தினகரன், இந்தியா டுடே, ஃபெமினா ஆகிய செய்தித்தாள்கள் - இதழ்களில் செய்தியாளர், உதவி ஆசிரியர், இதழ் ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர்.

சுற்றுச்சூழல், அறிவியல், வரலாறு, குழந்தைகள் சார்ந்த எழுத்து, பேச்சு, செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டவர். 20 ஆண்டுகளாக சுற்றுச்சூழல், குழந்தைகள் சார்ந்து வெகுஜன இதழ்கள், துறை சார்ந்த இதழ்களில் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். நேரடியாகவும் மொழிபெயர்ப்பாகவும் 40-க்கும் மேற்பட்ட நூல்களைத் தந்துள்ளார்.

வாசிப்பு, இயற்கை-பறவை நோக்குதல், திரைப்படங்கள் பார்ப்பது போன்றவை அவர் மனத்துக்கு உற்சாகம் தருபவை.

Author's books

அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு

ஹிரோஷிமாவின் மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டால் சடாகோ சசாகி என்ற சிறுமி இரத்தப் புற்றுநோய்க்கு ஆளானாள். ஜப்பானியர்களின் நம்பிக்கையின்படி நீண்ட நாள் வாழ்வதற்காக ஆயிரம் காகிதக் கொக்குகளைச் செய்ய சடாகோ சசாகி முயல்கிறாள். அவளால் ஆயிரம் காகிதக் கொக்குகளை செய்ய முடிந்ததா? சடாகோ என்ன ஆனாள் என்பதே இந்த நிஜக்கதை.

அன்பைத் தேடி…

புதிய நிலம் தேடி அவளுடைய குடும்பத்தினர் போனார்கள். புதிய ஊரில் தாங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவோம் என்கிற எதிர்பார்ப்புடன் பயணித்தார்கள்… அந்தப் பயணம் இனிதே முடிந்ததா?

இயற்கையைத் தேடும் கண்கள்

அணில், உணவு தேடிவரும் கீரிப்பிள்ளை, ஆர்வக் குறுகுறுப்பு மிகுந்த நீர்நாய், மாட்டினங்களிலேயே மிகப் பெரிதான காட்டு மாடு போன்ற தமிழக உயிரினங்களைப் பற்றிக் கூடுதலாக அறிந்துகொள்ளலாம். இயற்கையைத் துப்பறிவதற்கான சிறந்த வழிகாட்டியாக இந்தப் புத்தகம் திகழும்.

இளையோருக்கு மார்க்ஸ் கதை

மார்க்ஸ் எனும் எளிய மனிதர், எப்படி தன் அர்ப்பணிப்பு உணர்வாலும் சிந்தனைகளாலும் உலகின் மகத்தான மனிதராக ஆனார் என்பதை இப்புத்தகம் சொல்கிறது.

உயரப் பறந்த சாலிம் அலி

சாலிம் அலி போன்ற ஒருவர் கடந்த நூற்றாண்டில் இந்தியாவுக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால், இந்தியப் பறவைகள், காடுகள் குறித்த புரிதல் பெருமளவு பின்னடைவைச் சந்தித்திருக்கும்.

எத்தனைக் காலம்தான் ஏமாற்ற முடியும் ?

ஸ்னீச்சஸ் என்று ஒரு விநோதப் பாலூட்டி இனம். அதில் ஒரு பகுதி ஸ்னீச்சஸூக்கு வயிற்றில் நட்சத்திரமும், மற்றொரு பகுதி ஸ்னீச்சஸூக்கு வயிற்றில் நட்சத்திரம் இல்லாமலும் இருந்தது. நட்சத்திர ஸ்சீச்சஸ், நட்சத்திரமில்லாத ஸ்னீச்சஸை ஒதுக்கி வைத்தே வாழ்ந்து வந்தது. இந்த நேரத்தில் வயிற்றில் நட்சத்திரம் பொறிக்கும் இயந்திரத்துடன் அங்கே வருகிறார் வாரன் டிமோ. அதற்குப் பிறகாவது இரண்டு வகை ஸ்னீச்சஸூம் கூடி வாழ முடிந்ததா, வாங்க தெரிந்து கொள்வோம்.

1 2 6